அக்னி நட்சத்திரத்தின் வரலாறு!
அக்னி நட்சத்திரத்தின் வரலாறு!
🌀 அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3வது பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

🌀 அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன. அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும். இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

அக்னி நட்சத்திர வரலாறு :

🌀 முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும். எனவே அக்னிபகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

🌀 அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. 'அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்" என வருணன் கூறினான்.

🌀 இதையறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் ஓடி, 'நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்" என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ஜீனனைப் பார்த்தார். அர்ஜீனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான்.

🌀 அப்போது கிருஷ்ணர், '21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்" என்றார். அதன்படி அக்னி தேவன் காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் என்று சாஸ்திரங்களில் கூறுப்படுகிறது.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad