உங்கள் வீட்டில் எறும்பு தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க


நமது வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் போதும் அங்கு இருக்கும் சர்க்கரையை விட எறும்புகள் தான் அதிகமாக இருக்கும்.
மேலும் நமது வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கி இருக்கும்.
எனவே இந்த எறும்புகளை அழிப்பதற்கு கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் போன்றவற்றை பயன்படுத்துவோம்.
ஆனால் அதனால் எந்தவித பயன்களும் இல்லாமல் முடிவில் தோல்விகளே மிஞ்சும்.
எனவே நமது வீட்டில் இருக்கும் இயற்கைப் பொருட்களை கொண்டு எறும்புகள் வராமல் தடுக்க முடியும்.

எனவே நமது வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்கள் மூலம் எறும்புகளின் தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சம அளவில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்

எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

புதினா

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவி விட வேண்டும். இதனால் எறும்புகள் அதை சாப்பிட்டு இறந்துவிடும்.

டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருளாக இருக்கிறது. இந்த பவுடரை
எறும்புகள் உள்ள இடத்தில் தூவி விட வேண்டும். இதனால் எறும்புகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிராம்பு
சர்க்கரை டப்பாவில் சிறிது கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் தடுக்கப்படும்.

பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு
எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி வைத்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.
மேலும் வீட்டை துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ் பவுடர்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் விரைவில் விடுபடலாம்

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad