செல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..?செல்ஃபோன் எண்மூலம் உங்கள் வயதை அறியலாமா..? உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை வைத்து, உங்கள் வயதைச்  சொல்லும் புதிர்க் கணக்கு இது. மூளைக்கான பயிற்சியும்கூட. வேலைப் பளு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களிலிருந்து விடுபட மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களை உற்சாகமாக மாற்றும். சிறு பிள்ளையைப் போல மனதை இலகுவாக்கும்.

இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்... 

அதிசயம், ஆனால் உண்மை... 

நம்முடைய செல்போன் எண்ணை வைத்து, நம்முடைய வயதைக் கணிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

உங்கள் செல்ஃபோனின் கால்குலேட்டரை ஆன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப்-1: உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை 2 ஆல் பெருக்குங்கள்.

ஸ்டெப்-2: பெருக்கியதும் வரும் எண்ணுடன் 5-ஐ சேர்த்துக்கூட்டுங்கள். கூட்டிவிட்டீர்களா?

ஸ்டெப்-3: இப்போது கிடைக்கும்  எண்ணை  50ஆல் பெருக்குங்கள். பெருக்கி முடித்ததும் என்ன தொகை வருகிறதெனப் பாருங்கள்.

ஸ்டெப்-4: வரும் எண்ணுடன் 1,767 சேர்த்துக் கூட்டுங்கள்

.ஸ்டெப்-5: இத்துடன் நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்களோ அந்த வருடத்தை வைத்துக் கழிக்கவும்.

இப்போது மூன்று டிஜிட்டில் வரும் முதல் எண், உங்கள் செல்ஃபோனின் கடைசி எண் ஆகும். மற்ற இரண்டு எண்கள்தான் உங்கள் வயது... 
எப்...பூடி??


Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad