குழந்தைகளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு வழிகள்!!!


குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான வழிகள்!!!


குழந்தையும் தெய்வமும் ஒன்று. கள்ளம்கபடம் இல்லாத அந்த உள்ளத்தில் இறைவனை காணலாம். நம்மிடையே இருக்கும் செல்வத்தில் சிறந்த செல்வம் குழந்தைச்செல்வம். ஒரு வீட்டில் குழந்தை இருந்தால் அந்த வீட்டில் கூச்சலும் கொண்டாட்டமும் குறைவில்லாமல் இருக்கும். அவர்களின் மகிழ்ச்சிக்கும் விருப்பத்திற்கும் தடையே இருக்காது. குழந்தை பராமரிப்பு என்று வந்து விட்டால் தாய்தான் முதன்மையான பங்கு வகிக்கின்றாள்.
சில சமயங்களில் உங்கள் மனைவி வெளியில் செல்லும்போது உங்கள் குழந்தையையோ அல்லது உங்கள் சகோதரியின் குழந்தையையோ நீங்கள் பார்த்துக்கொள்ள நேரும். அம்மா இல்லாதபோது குழந்தையை சமாளிப்பது என்பது எல்லோராலும் முடியாத ஒன்றாகும். தனது கள்ளம்கபடமற்ற உள்ளத்தால் உங்களை முழுவதுமாக ஆக்கரமித்து விடுவார்கள். நீங்கள் சாதுர்யமாக இல்லாவிட்டால் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். சாக்லேட், ஐஸ் கிரீம் மற்றும் பலவற்றை வாங்கித் தந்தாலும் அவை தீர்ந்தவுடன் மீண்டும் உங்களிடம் தான் வருவார்கள் அதனால் நீங்கள் அவர்களை ஆக்கரமிக்கும் வழிகளை கண்டறியவேண்டும்.
குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் அவர்கள் உங்களை ஒவ்வொரு நிமிடமும் சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகவும் விருப்பமானதாகவும் இருக்க வேண்டும். உங்களிடம் கி கொடுக்கும் பொம்மையாக இருந்தகாலம் மாறிவிட்டது. ஒரு குழந்தையை பராமரிக்க வேண்டுமானால், அதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் அவர்களை சுறுசுறுப்பாக வைக்க தேவையான பொருட்கள் முதலியவற்றை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான DVD க்கள் ,கேம்ஸ், சாக்லேட் மற்றும் மொபைல் கேம்ஸ் முதலியவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கதைப் புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்க இதோ சில வழிகள்…

வரைதல்
குழந்தைகளுக்கு வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்றவை மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி நீண்ட நேரம் செலவழிப்பார்கள். சில படங்களை பிரிண்ட் செய்து கலர் க்ரேயான்சும் கொடுத்தால் நீங்கள் சில மணிநேரம் ஓய்வெடுக்கலாம்.

கண்ணாம்பூச்சி
இந்த உலகமயமான விளையாட்டை எல்லா குழந்தைகளும் விரும்புவார்கள். இதற்கு உங்களிடம் மிகுந்த பொறுமையும் ஓடி ஆடி விளையாடுவதற்கான சக்தியும் இருந்தால் மட்டும் போதுமானது.

கார்டூன்
பொழுது போகாத நிலையில் அவர்களுக்கு விருப்பமான கார்டூனை டிவியில் சில நேரம் ஓடவிடுவது அல்லது கார்டூன் படங்களை போடுவது போன்றவற்றை செய்யாலாம்.

பில்டிங் ப்ளாக்ஸ்
அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஒரு பாயை விரித்து அதில் ப்ளாக்ஸை கொடுத்து விளையாடச் செய்தால் அதில் நீங்கள் பலவிதமான கட்டமைப்புகளை பார்த்து ரசிக்கலாம்

புத்தகங்கள்
இல்லை! குழந்தைகள் புத்தகத்தை படிக்கமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களுக்காக படித்துக்காட்ட வேண்டும். வண்ணமிகு படங்கள் நிறைந்த புத்தகத்தை வாங்கி அவர்கள் விரும்பத்தக்க வகையில் ஒரு கதை சொல்ல வேண்டும்.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம்
நேரம் இருந்தால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் சிறிது நேரம் செலவழிக்கலாம். குழந்தைகள் பூங்காவில் சறுக்கு மரத்தில் ஏறி இறங்குவதற்கும் ஊஞ்சல் ஆடுவதற்கும் பெரிதும் விரும்புவார்கள்.

ஷூட்டிங்
சோப்பு நுரை அடங்கிய கன் வாங்கி உங்கள் குழந்தையுடன் போர் விளையாட்டு விளையாடலாம். உங்கள் குழந்தை ஆணாக இருந்தால் இதில் அதிக நேரம் செலவழிக்கலாம்.

வீடியோ கேம்ஸ்
உங்கள் மொபைலில் சிறுவர் விளையாடும் கேமேஸ் ஒன்றை டவுன்லோட் செய்து அவர்களிடம் கொடுத்தால் சிறிது நேரம் அதில் செலவிடுவார்கள்.

ரோல் பிளே
உங்கள் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், இந்த ரோல் பிளே விளையாட்டி சிறிது நேரம் செலவிடுவார்கள். அதிலும் பார்பி போன்று நடி என்று சொல்லி விட்டால் போதும் நேரம் போவது தெரியாது.

மதிய உறக்கம்
இவை அனைத்தும் முடிந்த பின்பு ஒரு கதையைச் சொல்லி அவர்களை தூங்க வைக்க வேண்டும். தூங்குவதால் அவர்களின் களைப்பு நீங்கும். மீண்டும் தொடங்குவதற்கு உங்களுக்கும் சிலமணி நேரங்கள் கிடைக்கும்

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad