உண்மையை பாேட்டு உடைத்த பிபிசி.! இந்தியாவில் எல்லாமே போலியான வாக்குகள் :இந்தியாவில் எல்லாமே போலியான வாக்குகள் : உண்மையை போட்டு உடைத்த பிபிசி.!


உண்மையான காட்சி போன்ற கிட்டத்தட்ட சரியாக தோற்றமுள்ள சாயல் காட்சி பலகை செய்யப்பட்டு அதற்கு அடியில் ஒரு நுண்செயலி மற்றும் ஒரு ப்ளூடூத் ரேடியோ மறைத்து வைக்கப்பட்டுள்ளது.!


இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமானது 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தல் முதல் சமீபத்தில் 2017-ஆம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்தல் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பபட்டு வருகிறது. ஆனால் சமீபத்து உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்த சமீபத்திய தேரத்லில் தான் முதன் முறையாக கள்ள ஓட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே பதிவு செய்துள்ளது என்ற குற்றசாட்டு கிளம்பியது.

இது சாத்தியமா.? இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளானது இது சாத்தியமா.? இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் மூலம் போலியான வாக்குகளை அல்லது கள்ள ஓட்டுகளை உருவாக்க முடியுமா.? இவிஎம்-களை கட்டுப்படுத்த முடியுமா.?நம்பகத்தன்மை

பொதுவாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலுவானவைகள் மற்றும் எதனை கொண்டும் தலையிடவோ அல்லது ஊடுருவவோ முடியாதவைகள் ஆகும். அவ்வளவு ஏன் இவிஎம்-களை அதன் உற்பத்தியாளர்களால் கூட சட்டவிரோதமாக திறமையாக கையாள முடியாது. ஆனால் தற்போது நிலைமை வேறு, பலவகையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இவிஎம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது என்றே கூற வேண்டும்.இவிஎம்

சமீபத்தில், இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் வண்ணம் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. அதில் வழக்கம் போல இவிஎம்களை ஹேக் செய்ய இயலாது என்று தான் கூறப்பட்டுள்ளது.ஹேக்

ஆனால் 2010 ஆம் ஆண்டிலேயே அமெரிக்க விஞ்ஞானிகள் மூலம் நமது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு, அதை பிபிசி அம்பலப்படுத்தி இவிஎம் கருவிகளின் பலவீனம் நிரூபிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா.?'மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங்'

ஆம். 2010-ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நமது இந்திய மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஊடுருவ ஒரு நுட்பம் உருவாக்கி காட்டினர். சமீபத்திய தேர்தலில் பா.ஜா.க-வின் அபாரமான வெற்றியை தொடர்ந்து பிபிசி மீண்டும் அந்த தகவலை பகிர்ந்துள்ளது.மொபைல்

அதாவது மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் சொந்தமாக உருவாக்கப்பட்ட ஒரு கணினியோடு இவிஎம் இயந்திரம் இணைக்கப்பட்ட பின்னர் மொபைலில் இருந்து உரை செய்திகளை அனுப்புவதன் மூலம் முடிவுகளை மாற்ற முடிந்தது.திருத்தங்கள்

அப்போது முதலே இந்திய தேர்தல் அதிகாரிகள் தங்கள் இயந்திரங்கள் பிழையேற்படுத்த முடியாதவைகள் , மற்றும் அதில் திருத்தங்கள் எதுவும் நிகழ்த்த முடியாது என்றும் மிகவும் கடினமாக ஒரு கருவி என்றுமே கூறி வருகின்றனர் மற்றும் ஒவ்வொரு பொது தேர்தல்களிலும் இந்தியா முழுதும் சுமார் 1.4 மில்லியன் மின்னணு வாக்கு இயந்திரங்களை இந்திய தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.நுண்செயலி

இந்த ஹேக் நிகழ்வில் இயந்திரங்களில் உண்மையான காட்சி போன்ற கிட்டத்தட்ட சரியாக தோற்றமுள்ள சாயல் காட்சி பலகை செய்யப்பட்டு அதற்கு அடியில் ஒரு நுண்செயலி மற்றும் ஒரு ப்ளூடூத் ரேடியோ மறைத்து வைக்கப்பட்டுள்ளதுநிஜமான எண்ணிக்கைகள்

உருவாக்கப்பட்ட போலியான டிஸ்ப்ளே மூலம் அடிப்படையிலேயே போலியான தேர்தல் முடிவுகளை காட்சிப்படுத்தி காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள். இதில் நிஜமான எண்ணிக்கைகள் இடைமறிக்கப்பட்டு நேர்மையற்ற எண்ணிக்கைகள் காட்சிப்படுத்தப்படும்.வாக்குகளை மாற்ற முடியும்

கூடுதலாக ஒரு சிறிய நுண்செயலி சேர்க்கப்படுவதின், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு இடையே இயந்திரம் சேமித்து வைத்துள்ள வாக்குகளை மாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளன.மென்பொருள்

இந்த ஹேக் சம்பவத்திற்கு பிறகும் கூட இந்தியாவின் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உலகின் மிக டாம்பர்ப்ரூப் கொண்டவைகள் என்று கருதப்படுகின்றன. அதற்கு காரணம், வேட்பாளர்கள் மற்றும் வாக்குகளை பதிவு செய்ய எந்தவிதமான கணினி சிப்களும், எந்த மென்பொருள்களும் இயந்திரத்தினுள் இல்லை என்பதால் தான்.முற்றிலும் சாத்தியமற்றது

இந்த ஹேக் ஆராய்ச்சி குறித்து அப்போதைய இந்திய துணை தேர்தல் ஆணையர் 'இது வெறும் இயந்திரம் அல்ல, ஒட்டுமொத்த நிர்வாக பாதுகாப்பின்படி பார்க்கும் போது இதை கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் சாத்தியமற்றது' என்று விளக்கம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.நிரூபணம்

2010-ஆம் ஆண்டிலேயே இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்படும் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இந்த 2017-ஆம் ஆண்டின் (இப்போதைய) அதி நவீனத்துவத்தை கொண்டு எதையும் சாத்தியப்படுத்தலாம் என்று நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. காலமும், தொழிநுட்பமும் தான் இதற்கு பதில் கூற வேண்டும்.!

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad