மூன்றே வாரத்தில் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வழி!
இங்கு மூன்றே வாரத்தில் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனையா? இதிலிருந்து விடுபட இயற்கை வழிகளை நாடுகிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பைல்ஸ் பிரச்சனையானது குத அல்லது மலக்குடல் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைந்து மற்றும் காயமடைந்து, கடுமையான வலி மற்றும் சில நேரங்களில் இரத்தக்கசிவையும் ஏற்படுத்தும்.

ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், கடுமையான எடையுடைய பொருட்களை அதிகம் தூக்குவது, உடல் பருமன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது இந்த பைல்ஸ் பிரச்சனைக்கான ஓர் எளிய இயற்கை தீர்வைக் காண்போம்.

பெரிய வாழைப்பழம் - 1
ராஸ்பெர்ரி பழம் - 2

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலம் வெளியேற உதவி, பைல்ஸ் வலியில் இருந்து விடுவிக்கும்.

ராஸ்ப்பெர்ரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இவை குடலில் சளி உற்பத்தியை அதிகரித்து, மலம் வெளியேறுவதில் உள்ள பிரச்சனையைத் தடுக்கும்.

ஒரு பௌலில் வாழைப்பழம் மற்றும் ராஸ்ப்பெர்ரி பழத்தைப் போட்டு, ஸ்பூன் கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தினமும் இரவு உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி மூன்று வாரம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனை குணமாகி இருப்பதை உணர்வீர்கள்.
Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்