ஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?ஏன் ஆண்கள் கட்டாயம்    அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.

இந்திய பெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன?

இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை குறித்து இனிக் காண்போம்...


நோய் தடுப்பு முறை

ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.


குடல் இறக்க நோய்

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

உடல் எடை

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கருப்பு கயிறு

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்.

அரைஞாண் கயிறு நீக்கம்

சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது..

அரைஞாண் பெயர் விளக்கம்

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.மகாபாரத கதை

மகாபாரதத்தில் திருதராட்டிரன் பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் போனதால் காந்தாரியும் தனது கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்தார். பதிபக்தியின் காரணமாக பல சக்திகள் கொண்டிருந்தார் காந்தாரி.


குருட்சேத்திரப் போர்

குருட்சேத்திரப் போரில் துரியோதனன் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காந்தாரி தன் பார்வை சக்தியால் அவனது பலத்தை அதிகரிக்க ஆடையின்றி வருமாறு கூறினார்.


கிருஷ்ணனின் வேலை

துரியோதனன் செல்லும் வழியில் கிருஷ்ணன் இடை புகுந்து அம்மாவாக இருப்பினும், ஓர் ஆண்மகன் இப்படி முழு நிர்வாணமாக செல்வதா? என கூறி இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினார்.


துரியோதனனின் வீழ்ச்சி

காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலாமல், கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad