குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?இந்தியாவில் 65% பால் கலப்படத்துடன் தான் விற்கப்படுகிறது என்பது ஆய்வுகள் கூறும் திடுக்கிடும் உண்மை. பாலில் நீர் மட்டுமின்றி யூரியா, கெமிக்கல், சிந்தடிக் பால் என பலவற்றை கலப்படம் செய்து விற்கின்றனர்.
இதை ஆய்வகங்களில் வைத்து எளிதாக கண்டுப்பிடித்துவிடலாம். ஆனால், தினமும் பால் குடித்து வாழ்ந்து வரும் ஒரு சாமானிய மனிதன் இதை எப்படி கண்டறிவது?
அதற்கும் சில வழிகள் இருக்கின்றன. இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே பரிசோதனை செய்து நீங்கள் பருகும் பாலில் கலப்படம் இருக்கிறதா என கண்டறியலாம்….

பவுடர் கலப்பு!
பாலில் பவுடர் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிவதற்கு நீங்கள் பாலை 2-3 மணி நேரம் காய்ச்ச வேண்டும். உண்மையான கலப்படம் அற்ற பாலாக இருந்தால் ஸ்மூத் க்ரீம் போல பால் கெட்டி நிலை அடையும், இது ஆரோக்கியமான பால். அதுவே, கல் போல கெட்டி நிலை அடைந்தால் அதில் பவுடர் கலப்படம் இருக்கிறது என எளிதாக அறியலாம்.

நீர் கலப்பு!
நீர் கலப்பை மிக எளிதாக கண்டறியலாம். பாலை சற்றே சாய்வான பகுதியில் ஓரிரு துளிகள் ஊற்றினால் அது ஒரு பாதை போன்று ஓடினால் நீர் கலப்பு இருக்கிறது என அர்த்தம். அதுவே பாதை போன்று ஓடாமல் ஓரிரு துளிகள் சற்றே சாய்வான பகுதியிலும் தேங்கி நின்றால் அது உண்மையான கலப்படம் அற்ற பால்.

மாவு கலப்பு!
உங்கள் பாலில் மாவு கலப்படம் இருக்கிறது என்பதை அறிய, ஒரு கரண்டி பாலில் ஓரிரு டேபிள்ஸ்பூன் உப்பு கலந்தால், அதில் நீல நிற வட்டங்கள் தோன்றினால், அது மாவு கலப்படம் செய்யப்பட்ட பால். நீல நிற வட்டங்கள் தோன்றாவிட்டால் அது உண்மையான கலப்படம் அற்ற பால்.

சிந்தடிக் பால்!
பாலில் பெவிகால் அல்லது சோப்பில் சேர்க்கும் வகையிலான கெமிக்கல் கலப்பு செய்வது. இதை ருசியை வைத்தே கண்டறியலாம். கைகளில் ஊற்றி தேய்த்தால் சோப் நுரை போன்ற வெளிப்படும். மேலும், இதை சூடு செய்தால் மஞ்சள் நிறத்திற்கு மாறும். இந்த இரண்டு முறைகளில் சிந்தடிக் பாலை கண்டறியலாம்.

யூரியா!
பாலில் யூரியா கலப்பு உள்ளதை கண்டறிவது மிகவும் கடினம். நீண்டநாள் பதப்படுத்தி வைத்தாலும், பாலின் ருசி மாறாமல் இருக்க இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது ஆகும். இந்த வகை பாலுடன் நீங்கள் சோயாபீன் பவுடர் கலந்து ஷேக் செய்து, லிட்மஸ் (Litmus) பேப்பர் டிப் செய்தால், அந்த லிட்மஸ் பேப்பர் சிவப்பு நிறத்தில் மாறும். இதை வைத்து பாலில் யூரியா கலப்பு உள்ளது என கண்டறியலாம்.

ஃபார்மலினை!
ஃபார்மலினை (formalin) கலப்பு இருக்கிறதா என அறிய, நீங்கள் பாலில் சல்ஃபூரிக் அமிலத்தை கலக்க வேண்டும். கலந்த பிறகு பாலில் நீல நிற வட்டங்கள் உருவானால், பாலில் ஃபார்மலினை கலப்பு இருக்கிறது என அறியலாம்.

வீட்டிலேயே செய்யலாம்!
இந்த முறைகளை பின்பற்றி நீங்கள் தினமும் பாலில் எந்த வகையான கலப்படம் செய்யப்படுகிறது என எளிதாக அறியலாம். கலப்படம் அற்ற பாலே உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad