குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன்?

NSV
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன்?
  இவன் விமல் ❂ நம் நாட்டில் நிறைய பழக்க வழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

❂ அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதை பலரும் தங்களின் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்றும் நினைத்து பின்பற்றி வருகின்றனர்.

இந்த வழக்கதின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்?

❂ ஒரு குழந்தையானது தாயின் கருவறையில் பத்து மாதம் இருக்கிறது. இந்த பத்து மாதமும் குழந்தையானது தாயின் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் தான் இருக்கும்.

❂ சாதாரணமாக கடல் நீரில் நாம் கை விரல்களை 5 நிமிடம் வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்து விட்டு வாயில் வைத்து பார்த்தால் உப்பு அப்படியே இருப்பது தெரியும்.

❂ அது போல 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த குழந்தையின் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும். உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர், கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு.

❂ இந்த 10 மாதம் கருவறையில் இருந்த குழந்தையின் கழிவுகள் வெளியேற்றவே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பிறகு மொட்டைப் போடுகின்றனர். ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

❂ இது போன்ற உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அதை அலட்சியப்படுத்தி பின்பற்ற மாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் இது பரப்பப்பட்டது.

❂ சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

❂ நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்து தான் இது போன்ற நிகழ்வுகளை ஒரு பாரம்பரியமாக பின்பற்றி அதை வளர்த்தும் உள்ளார்கள்
      இவன் விமல்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad