புருவ முடி திருத்தம் செய்யும் பெண்களுக்கு

புருவ முடி திருத்தம் செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்

  இவன் விமல்

ஏதேனும் பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் என்றால் பெண்கள் புத்தாடை வாங்குகிறார்களோ இல்லையோ புருவங்களை செயற்கையாக அழகுபடுத்தக் கிளம்பிவிடுவார்கள். கண்ணுக்கு மையழகு தான். ஆனால் அதை இப்போதைய பெண்கள் தவறாகவல்லவா புரிந்து கொண்டிருக்கிறார்கள். புருவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதை வில் போன்ற புருவமாக மாற்ற புருவ உரோமங்களை கண்டபடி பிடுங்கியெறிந்து விடுகிறார்கள். நெல்லில் களை பிடுங்குவதைப் போல இப்படி உரோமங்களைப் பிடுங்கிச் செய்யப்படும் புருவச் சீரமைப்புகளால் பெண்களுக்கு அழகு கிட்டினாலும் காலப்போக்கில் அது எதிர்மறையான விளைவுகலையே ஏற்படுத்தும்.

  
உயிரோடு நெருங்கிய தொடர்பு

புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன. அந்தளவுக்கு உயிருக்கும் புருவ முடிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. உயிருக்கும் புருவமுடிகளுக்கும் இடையே தொடர்பை உண்டாக்கும் இடங்கள் வர்மங்கள் எனப்படும். புருவமுடிகளை அழகாக்குகிறோம் என்ற போர்வையில் அடிக்கடி பிடுங்குதல் உயிர்நிலையோடு சம்பந்தப்பட்ட வர்ம இடங்களை பலவீனப்படுத்துகின்றன. காலப்போக்கில் அந்தப் பலவீனநிலை பெண்களுக்கு குணமாக்கப்பட முடியாத வியாதிகளைப் பரிசளிக்கின்றன. குறிப்பாக புருவமுடிகள்.
வர்மங்களை அறிந்து கொள்ளுங்கள்

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது, கண்ணைச் சுற்றியு ள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்தவர்மம் , மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந் திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண் ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண் ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
ஆயுளைக் குறைக்கும் அழகாக்கும் உத்தி

வர்மங்கள் பாதிக்கப்படுவதால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.


சிதைந்து போகும் உடலின் மின்காந்த சக்தி

வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலை க்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும். நம் நாட்டுக் கலாச்சாரத்தி ற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் புருவங்களின் அழகையும் நீண்டநாளைக்குப் பேண முடியும்
     இவன் விமல் 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad