வெள்ளி நகை வாங்க போறிங்களா!!

Goldenvimal இவன் விமல்
வெள்ளி நகை வாங்க போறிங்களா!!

நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகை களை எப்படி தரம் பார்த்து வாங்குவது, மாற்றுவது, பராமரிப்பது..?
தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதி ரியா ன முழு நம்பகத்தன்மையை ஏற்படு த்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங் குவது நல்லது.
1) வெள்ளி ஒரிஜினலா என எப்படிக் கண் டறிவது..? நைட்ரிக் அமிலம், தூய வெள்ளியின் மீது படும்போது நுரைத்தால் அது நல்ல வெள்ளி.
2) வெள்ளி நகையை வெண்மையான சுவரில் தேய்க்கும்போது கறுப்புக் கோடு விழுந்தாலும், அது 100% வெள்ளிதான். அதற்காக, அடிக்கடி தேய்த்தால் வெள்ளி வீணாகிவிடும்!

3) வெள்ளி நகைகள், 80 டச் தரத்தில் கிடைத்தால் அது வெரிகுட் வெள்ளி.
4)பெரும்பாலும் வெள்ளிக் கொலுசுகள் 60 டச் தரத்தில்தான் கிடைக்கும். ஆனால், விலையோ 80 ‘டச்’ அளவுக்கானதாக இருக்கும். காரணம், 20 சதவிகிதம் இதில் சேதாரமாகவே போய் விடும். இனிமேல் வாங்கும்போது இதையெல்லாம் விசாரித்து தெளிவு பெற்று வாங்குங்கள்.
5) வெள்ளியை மாற்றி, வேறு வெள்ளி நகை வாங்க முடி வெடுத்தால், முன்பு எந்தக் கடையில் அதை வாங்கினீர்களோ… அங்கே யே விற்றால் சரியான விலை கிடைக்கும்.
6)ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான அடையாள வார்த்தைகள் வெள்ளி நகைகளில் பொறிக்கப்படுகின்றன. அதனால், நகைகளை வாங்கிய ஊரிலேயே விற்றால்தான் அதற்கான விலை கிடை க்கும்.
7) வெள்ளி நகை வியாபாரங்களில் ஊரு க்கு ஊர் பல சூட்சமங்கள் உள்ளன. தமிழ கத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும் பாலான நகைக் கடைகளில் வெள்ளி கொ லுசை வாங்கும்போது திருகாணி யுடன் சேர்த்து எடை போடுவார்கள். ஆனால், அதே கடையில் திரும்ப விற்கு ம்போது திருகாணியைக் கழற்றி விட்டு எடை போடுவார்கள். ஏனென்றால், அங்கு திருகாணிகள் பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்படுவதில்லை என்பதே காரணம். இனி, இதையும் கவனி த்தே கொலுசு வாங்குங்கள்.

பராமரிப்பு:-
1)‘வெள்ளி நகையை என் தங்கை அணிந்தால் கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கிறது. அதுவே நான் அணிந்தால்… கறுத்து விடுகிறது’ – இப்படி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும். இது அந்த நகையை அணிந்திருப்பவரின் உடல் வெப் பத்தைப் பொறுத்தது. உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், வெள்ளி கறுக்கும். குளிக்கும்போது வெள்ளி நகைகளையும் குளிப்பாட்டினால்… கறுப்பழகி, வெள்ளையழகியாகலாம்.
2)வெள்ளி நகைகள் கறுத்துப் போனால் பல் துலக்கும் பேஸ் ட்டினால் கழுவலாம்; கடுமையான அழுக்கு ஏறி இருந்தால், பூந்திக்கொட்டை ஊற வைத்த நீரில் கழுவலாம்.
3)தயிர், எலுமிச்சம் பழம் போன்றவையும்கூட, அழுக்கை சுத்தமாக நீக்கும். ஆனால், இவற்றை அடி க்கடி உபயோகித்தால், அவற்றில் உள்ள அமிலம் வேதி வினைபுரிந்து, வெள்ளியைக் கரைக்கக்கூடும்.
4)வெள்ளி, நொடியில் பளபளக்க வேண்டுமா…? வீட்டில்இருக்கும் மென்மையான திருநீறைப் போட்டு மெள்ளத் தேய்த்தால்… விரும்பிய ரிசல்ட் கிடைக்கும்.
வெள்ளிப் பாத்திரங்கள்:-
பிறந்த வீட்டு சீதனமாகவோ, வீட்டு விசேஷங்களுக்கு கிஃப்ட்டாகவோ வந்த வெள்ளிப் பாத்திரங்களை காலத்துக்கும் பத்திரமாக பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் அல்லவா..? கூடவே, குழந்தைக்கு ஆசையாக சோறு ஊட்ட கிண்ணம், ஸ்பூன், டம்ளர், பூஜை சாமான்கள் என வெள்ளியில் வாங்கும்போது, தரம் குறையாமல் பார்த்து வாங்க வேண்டும் அல்லவா..?
1) வெள்ளி நகைகளைப் போலவே பாத்திரங்களையும் நம்பிக்கையான கடையில் வாங்க வேண்டும். வாங்கும்போது, அதில் சீல் இருக்கிறதா என கண்டிப்பாகப் பார்த்து வாங்குவது விலை கொடுத்து வாங்கும் காசுக்கு நல்லது.
2)வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக ஸ்டீல் பீரோவிலோ… ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்தி ரங்களுடன் கலந்தோ வைக்காமல் இருப்பது நல்லது.
3)நியூஸ் பேப்பர் அல்லாத மற்ற பேப்பர்கள், பிரவுன் கவர் பேப்பர்களில் சுற்றி வைக்கலாம்.
4) பாட்டி காலத்து மரப்பெட்டி இருந்தால், அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். அதற்குள் வெள்ளிப் பாத்திரங்களை பத்திர ப்படுத்தி வைக்கலாம். மர பீரோவில் வைப்பது மிகச்சரியான சாய்ஸ்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. நானும் பிளாக் ஆரமிக்கனும்னா எப்பிடி பண்றது

    ReplyDelete

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad