குழந்தைக்காக ஒரு கவிதை மிருதுலாஸ்ரீ பவியும் நானும் !!!!

NSV
👶குழந்தைக்கு ஒரு கவிதை 👶

எதை 
எதையோ
சாதித்துவிடுகிறாய் நீ!
உன் 
ஒரே ஒரு 
அழுகையால்!

உன் 
அழுகையை 
ரசிப்பதற்கேனும்
அழவிடலாம் 
கொஞ்சநேரம்...
மனதை 
கல்லாக்கிக்கொண்டு !

இப்பூவுலகில் 
உன்னைப் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட்டேன்...
இனி 
வாழப்போவது 
இந்தப் பூவுக்காகத்தான்!

எல்லா 
மொழிகளையும் மறந்துவிட்டேன்
உன் 
மழலை மொழியினை 
புரிந்துகொண்ட பிறகு !

தத்தி தத்தி 
நடக்கிறாய் ...
விழுகிறாய்,
விழுந்த பின் 
அழுகிறாய் ... 
பின் எழுகிறாய்
எழுந்த பின்
சிரிக்கிறாய்...
-
உன்னிடமிருந்துதான்
கற்றுக்கொள்ள வேண்டும் !
வாழ்வில்
சோகமும், சந்தோசமும்
நிலையாய் 
இருப்பதில்லை ...
என்று !!

உன் பிஞ்சு 
முகத்தில் 
தோன்றும் 
அழகிய புன்சிரிப்பு 
ஆயிரம் கவலைகளை 
மறக்கின்ற 
அருமருந்து !

நிம்மதியை 
தேடி அலையும்
குருடர்களே
இங்கே 
வாருங்கள் !
ஒர்
இலவச கல்விக்கூடம் 
உங்களுக்காக 
காத்துக்கிடக்கிறது....
குழந்தைகள் வடிவத்தில் !!!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad