ஜல்லிக்கட்டு

*ஜல்லிக்கட்டு நடத்த மாற்று வழி** 
       இவன் விமல் 
நண்பர்களுக்கு  பகிருங்கள்..
நேற்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாற்று வழி அவர் Facebook பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அது என்னவென்றால், ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, பொங்கல் விளையாட்டு என்று நடத்துங்கள், பேனர்கள் அடித்து அதில் "இங்கு ஜல்லிக்கட்டு நடத்த படவில்லை.. பொங்கல் விளையாட்டு தான் நடைபெறுகிறது..." என்று அச்சிட்டுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனக்கும் இது எப்படி சாத்தியம்...
பிறகு ஒரு விஷயம் மனதில் பட்டது... 
அதாவது, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டில், சென்னை, ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விளையாட தடை விதிக்க பட்டது.
இப்ப என்னடானு பார்த்தால், அதே அணி வீரர்களை,பயிற்சியாளர்களை கொண்டு பூனே, ராஜ்கோட், என்று பெயர் மாற்றம் செய்து, ஏலம் நடத்தி விளையாட அனுமதித்துள்ளனர்.
அதாவது இப்ப விளையாட போறது சென்னை,ராஜஸ்தான் இல்லையாம் பூனே, ராஜ்கோட் அப்படின்னு சொல்றாங்க...
பயிற்சியாளர்களுக்கும் தடையில்லை வீரர்களுக்கு தடையில்லை அப்புறம் யார தடை பண்ணீங்க..?
இது சாத்தியம் என்றால் ஏன் ஜல்லிக்கட்டை பெயர் மாற்றி, *பொங்கல் விளையாட்டு, தமிழர் வீர விளையாட்டு* என பெயரிட்டால் அதை தடை செய்ய முயற்ச்சித்தால் தமிழர் என்றாலே தடையா என போராடலாம் அல்லவா?
இல்ல வேறு ஏதாவது பெயரில் ஏன் நடத்த முடியாது.
சாத்தியமும் கூட...
தமிழன் என்ற உணர்வுடன்
மீண்டும் மீண்டும்
மீண்டும்...
பகிர்ந்து கொண்டேயிருங்கள்...

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad