அஷ்டபந்தனமருந்து

என்றும் ஒரு தகவல்

"பகையோ சினமோ நமக்கெதற்கு, சில நாள் வாழ்வில் வெறுப்பெதற்கு..."


அஷ்டபந்தன மருந்து !

கும்பாபிஷேகத்துக்கு முன்னால் சுவாமிக்கு மருந்து சாத்துவார்கள் . சிலைகள் பீடத்துடன் கெட்டியாக பற்றிக் கொள்வதற்கு மருந்து சாத்துவது வழக்கம் . புளிப்பான பொருள்களை மண்டலாபிஷேகம் முடியும் வரை அபிஷேகத்தில் பயன்படுத்த மாட்டார்கள் .

கும்பாபிஷேக மருந்தை மூன்று பொருள்களாலும் , எட்டு பொருள்களாலும் தயாரிப்பார்கள் . மூன்று பொருள்களால் தயாரிப்பது திரிபந்தனம் என்றும் , எட்டுப் பொருள்களால் தயாரிப்பது அஷ்ட பந்தனம் என்றும் சொல்லப்படும் . பொன்னையே உருக்கி வார்ப்பதும் உண்டு . அதற்கு சுவர்ணபந்தனம் என்று பெயர் .
அஷ்ட பந்தனத்தில் எட்டு வகையான பொருள்களை சேர்ப்பார்கள் . சேர்ப்பதற்கு கணக்கு உண்டு .
கொம்பரக்கு பங்கு 1 .
கருங்குங்கிலியம் பங்கு 3 .
சுக்கான் பங்கு - முக்கால் .
காவிக்கல் - பங்கு 3 .
வெண்மெழுகு பங்கு 3 .
வெண்ணெய் பங்கு 3 .
செம்பஞ்சு பங்கு 3 .
சாதிலிங்கம் பங்கு - கால் .
ஆகியவற்றை ஒன்று சேர்த்து உலக்கையால் தொடர்ந்து இடிப்பார்கள் . இடி படப்பட வெண்ணை உருகும் . நல்ல மெழுகு பதத்தை அடையும் . மெழுகு பதத்தில் சூட்டுடன் இருக்கும் மருந்தினை எடுத்து சாத்துவார்கள் .
இந்த நாட்களில் முன்பு போல தொடர்ந்து பலரும் கூடிநின்று மாறி மாறி உலக்கையால் இடித்து மருந்தை தயாரித்து சாத்துவது குறைந்துபோய் விட்டது . சட்டியிலிட்டு சூடாக்கி மெழுகு பதத்தில் சாத்துகிறார்கள்

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad